இஸ்ரவேல் ஜனங்கள் !!! சிறையிருப்பில் இருந்தார்கள்! அடிமையாய் இருந்தார்கள்!!
எகிப்தில் பாரோனுக்கு பயந்து ஒரு பரிதவிக்கபட்ட வாழ்க்கையை
வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள். மோசமான முறையில் நடத்தப்பட்டார்கள். அநேகம் பேர்
மரித்தும் போனார்கள்.
கர்த்தர் அற்புத விதத்தில் இடைப்பட்டார். இஸ்ரவேல் ஜனங்கள்
விடுவிக்கப்பட்டனர். தங்களை அடிமைப் படுதினவர்களிடமிருந்து அவர்கள் விடுதலை
அடைந்தார்கள். சந்தோஷமாக எகிப்தை விட்டு புறப்பட்டார்கள். அவர்கள் சந்தோஷம் அதிக
நேரம் நீடிக்கவில்லை. பாரோன் தன் மனதை மாற்றிக்கொண்டான். தன் சேனையை அனுப்பி
இஸ்ரவேலரை திருப்பிக் கூட்டி வர சொன்னான். திரளான பாரோன் சேனை இஸ்ரவேலரை பின்
தொடர்ந்துக் கொண்டிருந்தது, அவர்களின் சந்தோஷம் இதை கண்டு துக்கமாக மாறிற்று.
அழுகையும் புலம்பலும் இவர்களை மூடிக்கொண்டது.
நம்பிக்கை இல்லாத சூழ்நிலை போன்று தோன்றிட்டு. செங்கடல் முன்னே பாரோன் சேனை
பின்னே, எந்த பக்கம் போனாலும் மரணம் நிச்சயம் என்று அவர்களுக்குள் தோன்றிற்று. ஆயினும்
கர்த்தர் அவர்களை கை விடவில்லை. மீண்டுமாக அற்புதமான முறையிலே அவர்களை விடுவித்தார். அவர்களுக்கு
முன்பாக இருந்த செங்கடலை அவர் இரண்டாக பிளந்தார், இஸ்ரவேலர் அதிலே நடந்தார்கள்
ஆனால் பாரோன் சேனையோ அதிலே மூழ்கி மாண்டார்கள். இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி
காண்பதில்லை என்று கர்த்தர் வாக்களித்தார்.
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி:
பயப்படாதிருங்கள்; நீங்கள்
நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;
இன்றைக்கு நீங்கள் காண்கிற
எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
யாத்திராகமம் 14 :13.
கர்த்தர் கூறிய வாக்குத்தத்ததை அவர்கள் நம்பினார்கள். அவரை துதித்து
பாடினார்கள். மடிந்து போவோம் என்று நினைத்த இஸ்ரவேலர் மகிழ்ச்சியோடு பாடினார்கள்.
கர்த்தர் அற்புதம் செய்தார். கர்த்தருக்கு பயந்து அவரின் மேல் நம்பிக்கை
வைத்தார்கள் என்று வசனம் சொல்லுகிறது. கர்த்தரின் மேல் நம்பிக்கை, கர்த்தருக்கு
துதி, கர்த்தர் தங்கள் தேவனாய் இருப்பதை
குறித்து மிகவும் மேன்மை பாராட்டினார்கள்.
இந்த விசுவாசம், துதி, நம்பிக்கை எத்தனை நாட்கள் நீடித்தது என்று
நினைகிறீர்கள்? ஐந்து ஆண்டுகள்? ஓர் ஆண்டு? ஒரு மாதம்? ஒரு வாரமாவது நீடித்ததா? மூன்று
நாட்கள் மட்டும்!!
மூன்று நாட்கள் வநாந்திரதிலே தண்ணீர் இல்லாமல் அலைந்தப் பொது ஜனங்கள் புலம்ப ஆரம்பித்தார்கள,
முறுமுறுக்க ஆரம்பித்தார்கள், அழ ஆரம்பித்தார்கள். கர்த்தர் செய்த நன்மைகளை
மறந்தார்கள். கர்த்தர் தங்களை விடுவிக்க வல்லவர் என்பதை சந்தேகித்தார்கள்.
செங்கடலை பிளந்த தேவன் வனாந்திரதிலே தண்ணீரை தர வல்லவர் என்பதை விசுவாசிக்காமல்
போனார்கள்.
ஆனாலும் கர்த்தர் கன்மலையிலிருந்து தண்ணீரை புறப்பட செய்தார். அத்தனை ஆயிரம்
மக்களின் தாகம் தீர்த்தார். மீண்டுமாய் அற்புதம் செய்தார். மீண்டுமாய்
விடுடித்தார். அவர்களின் அவிசுவாசமோ
மீறுதலோ கர்த்தரின் அற்புதத்தை நிறுத்தவில்லை. மோசே ஜனங்களுக்காக பரிந்து
பேசின போது கர்த்தர் மனதுருகினார்.
வேதம் சொல்லுகிறது அவர்கள் அவரின் வாக்குத்தததை நம்பினார்கள், துதித்தார்கள்
ஆயினும் மறந்துபோனார்கள் என்று.
ஒவ்வொரு முறையும் கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து அவருக்கு எதிராய் முறுமுறுத்தார்கள்
என்று நாம் வாசிகின்றோம்.
இது இஸ்ரவேல் ஜனங்களின் நிலை மாதரம் அல்ல. நம் வாழ்க்கையில் கர்த்தர் செய்த
நன்மைகள் ஆயிரம் ஆயிரம். ஒரு ஒரு முறையும் கர்த்தர் நன்மை நம் வாழ்வில் செய்யும்
போது நாம் அவரை துதிக்கிறோம், ஆராதிக்கிறோம், போற்றுகிறோம், விசுவாசிக்கிறோம். ஒரு
புது விசுவாசம் ஒரு புது நம்பிக்கை உள்ள மனிதனாய் நாம் உணருகின்றோம்.
எத்தனை நாட்களுக்கு? அடுத்த பிரச்சனை வரும் வரையில்!! அடுத்த
பிரச்சனையிளிருந்தும் கர்த்தர் நம்மை விடுவிக்க வல்லவர் என்பது நம் புத்திக்கு
எட்டாமல் போய்விடுகிறது. நாமும் இஸ்ரவேலர் மாதிரி தான் இருக்கிறோம். அவர்களை போல
முறுமுறுகிறோம், அவிசுவாசம் அடைகிறோம், புலம்புகிறோம். அவர்கள் மறந்துப்போனார்கள்,
நாமும் மறந்துப்போகின்றோம்!!
சகோதர சகோதரிகளே கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் வாக்கு பண்ணினால் அதை
மறப்பதில்லை. அவர் செய்வேன் என்றதை செய்தே முடிப்பார். அவர் பொய்ச்சொல்ல மனிதனல்ல,
மனம்மாற மனுப்புதிரனுமல்ல.
ஒரு வேளை இஸ்ரவேலர் போல நாமும் கர்த்தரின் மேல் நம்பிக்கை அற்றவர்களாக,
அவர்களை போல ஓர் இரு நாட்கள் மட்டுமே அவரின் மேல் நம்பிக்கை வைபவர்களாக இருப்போமேயானால்
இன்றே நாம் ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் செய்த நன்மைகளை நாம் ஒரு போதும் மறந்து
விடவேண்டாம். எப்பொழுதும் அவரின் துதி நம் வாயில் இருக்கட்டும். அவரின்
அற்புதங்களை மாத்திரம் நம் நாவுகள் பேசட்டும். அதையே நாம் எண்ணி துதிப்போமாக.
ஒருப்போதும் மறந்திடாதிருங்கள் கர்த்தர் நல்லவர் அவர் அற்புதங்கள் செய்ய வல்லவர்!!
ஆமென் !! ஹல்லேலுயா!!
by Carolyn Thomas