“இந்த வருடம் முழுவதும், உங்கள் நாட்கள் எல்லாம், பூமியின் மேல் பரலோகம் இறங்கி வந்த நாட்களைப்போலவே இருக்கும்!”
– KJV மொழிபெயர்ப்பு (உபாகமம்
11:18) என்பதே தேவன் நம் யாவருக்கும் வழங்க விரும்பும் பிரதான வாக்குத்தத்தம் ஆகும்.
மேலும், கர்த்தர் உரைப்பது யாதெனில் “வருஷத்தின் துவக்கம் முதல் வருஷத்தின் முடிவு மட்டும்....
கர்த்தரின் கண்கள் நம் மீது வைக்கப்பட்டிருக்கும்” (உபாகமம் 11:12) எனவும் கூறுவதைப் பாருங்கள்.
ஆகவேதான், நம் ஆண்டவரும் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை” என
சொல்லியிருக்கிறார் (எபிரெயர் 13:5).
இதனிமித்தமே நாமும் இப்போது
தைரியங்கொண்டு “கர்த்தர் எனக்குச்
சகாயர், ஆகவே மனுஷன் எனக்கு என்ன
செய்வான்?” எனக் கூறிட முடியும்!
(எபிரெயர் 13:6).
இனி நம் வாழ்வில் “தேவன்
உண்மையுள்ளவராய் இருக்கிறார்….... ஆகவே, என் திராணிக்கு
மேலாக என்னை சோதிப்பதற்கு அவர் இடம் கொடார்!” என நாம் கூற முடியும் என்பது மாத்திரமல்லாமல் “அந்த சோதனையோடு கூட நான் தப்பிக்கும் போக்கையும் அவர் உண்டாக்குவார்!”
(1கொரி 10:13) எனவும்
கூறிட முடியும்!
பாருங்கள், அவர் காண்பிக்கும் தப்பிக்கும் போக்கு “அவரது
கிருபையே ஆகும்!”
ஏனெனில் என் வாழ்வில் நான் சந்திக்கும்
ஒவ்வொரு சூழ்நிலைக்கும் “என்
கிருபை உனக்கு போதும்!” என்றே
கர்த்தர் நமக்கு வாக்குரைத்திருக்கிறார்
(2கொரி 12:9).
அவரது கிருபையாகிய பரிசுத்தாவியின்
வல்லமையை பெற்ற
நாம் “நம்மை நாமே வெறுத்து,
நம் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு இயேசுவைப் பின்பற்றக்கடவோம்”
(லூக்கா 9:23).
இவ்வாறெல்லாம் வாக்குத்தத்தங்கள்
நமக்கு உண்டாயிருப்பதால், அனுதினமும் அவரது சிலுவையை
எடுக்கும் நாம்….... நம்மை
சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஜெயம் பெற்றவர்களாய் கடந்து, இந்த ஆண்டின் இறுதியில் “இயேசுவின் சாயலுக்கொப்பாக” இன்னும் அதிகமாய் மாறுவோமாக! (ரோமர் 8:29) அனைத்து வாக்குதத்தங்களின் முடிவான நோக்கமே “நாம் இயேசுவைப் போல் மாற வேண்டும்!” என்பதன்றி வேறில்லை!
இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்க்கை
இவ்வழி சென்றால், “உங்கள் வாழ்வு,
இந்த பூமியின் மேல் பரலோகம்” இறங்கி வந்தது போலவே, வாக்குத்தத்தம் பலிக்கும்!
I will recommend anyone looking for Business loan to Le_Meridian they helped me with Four Million USD loan to startup my Quilting business and it's was fast When obtaining a loan from them it was surprising at how easy they were to work with. They can finance up to the amount of $500,000.000.00 (Five Hundred Million Dollars) in any region of the world as long as there 1.9% ROI can be guaranteed on the projects.The process was fast and secure. It was definitely a positive experience.Avoid scammers on here and contact Le_Meridian Funding Service On. lfdsloans@lemeridianfds.com / lfdsloans@outlook.com. WhatsApp...+ 19893943740. if you looking for business loan.
ReplyDelete