Monday, 27 January 2014

கிறிஸ்துவுக்குள் புதியதோர் புத்தாண்டு!


ந்த வருடம் முழுவதும், உங்கள் நாட்கள் எல்லாம், பூமியின் மேல் பரலோகம் இறங்கி வந்த நாட்களைப்போலவே இருக்கும்!” – KJV மொழிபெயர்ப்பு (உபாகமம் 11:18) என்பதே தேவன் நம் யாவருக்கும் வழங்க விரும்பும் பிரதான வாக்குத்தத்தம் ஆகும்.

மேலும், கர்த்தர் உரைப்பது யாதெனில் வருஷத்தின் துவக்கம் முதல் வருஷத்தின் முடிவு மட்டும்.... கர்த்தரின் கண்கள் நம் மீது வைக்கப்பட்டிருக்கும்” (உபாகமம் 11:12) எனவும் கூறுவதைப் பாருங்கள்.

ஆகவேதான், நம் ஆண்டவரும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லைஎன சொல்லியிருக்கிறார் (எபிரெயர் 13:5).
இதனிமித்தமே நாமும் இப்போது தைரியங்கொண்டு கர்த்தர் எனக்குச் சகாயர், ஆகவே மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” எனக் கூறிட முடியும்! (எபிரெயர் 13:6).

இனி நம் வாழ்வில் தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.... ஆகவே, என் திராணிக்கு மேலாக என்னை சோதிப்பதற்கு அவர் இடம் கொடார்!என நாம் கூற முடியும் என்பது மாத்திரமல்லாமல் அந்த சோதனையோடு கூட நான் தப்பிக்கும் போக்கையும் அவர் உண்டாக்குவார்!” (1கொரி 10:13) எனவும் கூறிட முடியும்!

பாருங்கள், அவர் காண்பிக்கும் தப்பிக்கும் போக்கு அவரது கிருபையே ஆகும்!ஏனெனில் என் வாழ்வில் நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும்என் கிருபை உனக்கு போதும்!என்றே கர்த்தர் நமக்கு வாக்குரைத்திருக்கிறார் (2கொரி 12:9).

அவரது கிருபையாகிய பரிசுத்தாவியின் வல்லமையை பெற்ற நாம் நம்மை நாமே வெறுத்து, நம் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு இயேசுவைப் பின்பற்றக்கடவோம்” (லூக்கா 9:23).

இவ்வாறெல்லாம் வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருப்பதால், அனுதினமும் அவரது சிலுவையை எடுக்கும் நாம்….... நம்மை சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஜெயம் பெற்றவர்களாய் கடந்து, இந்த ஆண்டின் இறுதியில் இயேசுவின் சாயலுக்கொப்பாக இன்னும் அதிகமாய் மாறுவோமாக! (ரோமர் 8:29) அனைத்து வாக்குதத்தங்களின் முடிவான நோக்கமே நாம் இயேசுவைப் போல் மாற வேண்டும்!என்பதன்றி வேறில்லை!

இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்க்கை இவ்வழி சென்றால், “உங்கள் வாழ்வு, இந்த பூமியின் மேல் பரலோகம்இறங்கி வந்தது போலவே, வாக்குத்தத்தம் பலிக்கும்!