நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவிலே முதன்முறையாக தன் காலை பதித்தவர். யாரும்
நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விஷயம் அது. அந்த நிகழ்விலே தான் இருபாறேன்றும்,
நிலவிலே காலைப் பாதிக்கும் முதல் மனிதன் தானாக இருபாறேன்றும் அவர் தன் கனவில் கூட
நினைதிடாத ஒன்று.
என்னமோ கடலைம்மிட்டாய் வாங்கி தருகிறேன் என்பதுப்போல, நிலவை பிடிதுத்தருகிறேன்
என்று சொல்லக் கேள்விப்படிருகிறோம். ஆனால் உண்மையாகவே நிலவிலே காலைப் பதித்தவர்
எத்தனை தாழ்மையுள்ளவர் தெரியுமா? அவர் கர்த்தருக்கு பயந்து வாழ்ந்த மனிதன். ஒரு
முறை இஸ்ரவேல் நாட்டிற்கு சென்றிந்த போது, இயேசு கிருஸ்து நடந்த கற்கள் மேல்
நடக்கும் போது சொன்னாராம், ‘ நிலவிலே நான் நடந்ததை விட இங்கே இயேசு நடந்த இடங்களிலே
நடபதையே நான் ஆசீர்வாதமாக எண்ணுகிறேன் என்றாராம்.
இவரது சிறு பிராயத்திலே நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.
இவர் சிறுவனாக இருக்கையில் திரு கோர்ச்கி என்ற ஒரு நபர் தன் பக்கத்துக்கு
வீட்டில் குடி இருந்தாராம். இவர் தன் நண்பர்களோடு தன் தோட்டத்தில் பேஸ்பால்
விளையாடுவாராம். அநேக முறை இவர்கள் விளையாடும் பந்து பக்கத்துக்கு வீட்டுகாரராகிய
கோர்ச்கியின் தோட்டத்தில் விழுந்திவிடுவதும் அவர்களுக்கு தெரியாமல் அத எடுத்துக்
கொண்டு வருவதும் வாடிக்கையாக இருந்ததாம்.
இதேப் போன்று பந்து எடுக்க ஒரு நாள் நீல் சென்ற வேளையில், கோர்ச்கியும் அவரது
மனைவியும் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்களாம். கோர்ச்கிக்கு கோல்ப் விளையாட்டு
மிகவும் பிடிக்குமாம். தன் நேரத்தை எல்லாம் அதை விளயாடுவதிலேயே செலுத்தி
விடுவாராம். அப்படி என்ன தான் இருக்கிறது அந்த விளையாட்டில், ஏன் இப்படி
வேலைக்கும் போகாமல் இந்த கோல்ப்யை விளையாடுகிறீர்கள் என்று மனைவி சத்தம்
போட்டுக்கொண்டிருந்தாளாம்.
உனக்கு இந்த விளையாட்டின் அருமையை எப்படி நான் புரியவைக்க போகிறேன் என்று
தெரியவில்லை, ஏன் என்னையும் என் ஆசையையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை உன்னால்
என்று கோர்ச்கியும் சத்தம் போட்டுக்
கொண்டிருந்தாராம்.
கொண்டிருந்தாராம்.
அவ்வேளையில் பந்து எடுக்க வந்த நீல்-யை கண்ட மனைவி கூறினாளாம், இந்த பந்தை
எடுக்கும் சிறுவன் நிலவின் மேல் தன் காலைப்பதிக்கட்டும் அப்போது நான் உங்களையும்
உங்கள் விளையாட்டையும் புரிந்துக்கொல்கிறேன் என்று.
நிலவிலே தன் காலை பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், இந்த கோர்ச்கி தம்பதியினரை அங்கே
நினைவுக்கூர்ந்தாராம். எதோ கூடாத காரியத்தை சொல்லி விட்டதாக அவர் மனைவி அன்று நினைத்திருக்கலாம்
ஆனால் மனிதனால் கூடாதக் காரியம் நம் தேவனால் கூடும் என்பது அநேகரால் இன்னும்
புரிந்துக் கொள்ள முடியவில்லை.
சகோதர சகோதரிகளே, பயப்படாதீர்கள், திகையாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் எல்லாம்
தோல்வி போல காணலாம், ஒன்றுமே முடியாது என்ற ஒரு நிலை போல தெரியலாம்,
கலங்காதீர்கள், கர்த்தர் உங்களோடு இருக்கிறார். தேவனால் கூடாதது ஒன்று உண்டோ என்று
அவர் உங்களை கேட்கிறார். சிறியதோ பெரியதோ எப்படிப் பட்ட விஷயமானாலும் அவருக்கு அது
லேசானக் காரியம். அவர் நம்மை சிருஷ்டித்தவர், எதையும் செய்வார், எல்லாமும்
செய்வார்.
நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள், அவர் வாக்கு மாறாதவர்!
ஆமென்! ஹல்லேலுயா!!
By
Carolyn Thomas
No comments:
Post a Comment